குமராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றி திரிந்த நல்லபாம்பை தீயணைப்புத்துறை வீர்கள் பிடித்தனர்.
குமராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றி திரிந்த நல்லபாம்பை தீயணைப்புத்துறை வீர்கள் பிடித்தனர்.

குமராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் நல்லபாம்பு சிக்கியது :

Published on

குமராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றித்திரிந்த நல்லபாம்பை தீயணைப்புத்துறை வீர்கள் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.

குமராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் வயல் பகுதியில் அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள வயல் வெளி பகுதியில் எலிகளை பிடிக்க நல்ல பாம்புகள் சுற்றி திரிகின்றன. இந்நிலையில் நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலைய பகுதியில் கொடிய விஷம் கொண்ட நல்லபாம்பு சுற்றி திரிவதை மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் பார்த்து கூச்சலிட்டனர். இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தீபனா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் ஆகியோர் காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற காட்டுமன்னார்கோவில் தீயணைப்பு நிலை அலுவலர் கொளஞ்சிநாதன் தலைமையில் தலைமை காவலர்கள் கோபிநாத், பன்னீர்செல்வம், ஓட்டுநர்கள் மணிவண்ணன், ஐயப்பன் ஆகியோர் கொண்ட குழுவினர் நல்ல பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அதை பாதுகாப்பாக எடுத்து சென்று பிச்சாவரம் காப்புக்காட்டில் விட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in