

ஈரோடு அருகே கட்டிடத் தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை மாவட்டம் கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி செல்வம் (52). இவர் ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் உள்ள அவரது மகள் வீட்டில் தங்கி கட்டிட வேலையில் ஈடுபட்டு வந்தார். நேற்று காலை அவரது மகள் வீட்டுக்கு அருகே உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்த புஞ்சைபுளியம்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று பிரேதத்தைக் கைபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் மர்ம நபர்கள் செல்வத்தின் தலை மீது கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.