

பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்தநாளையொட்டி, பாஜகவின் எம்.எஸ்.நகர் மண்டலம் சார்பில், புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலில், சிறப்பு பூஜை மற்றும் கொடியேற்று விழா நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் பி.செந்தில்வேல், மண்டலத் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், கோட்ட அமைப்பாளர் பாலகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர். அதேபோல திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று பிறந்த முதல் 5 குழந்தைகளுக்கு பாஜக சார்பில் வெள்ளிக் கொலுசுகள் பரிசாக வழங்கப்பட்டன.