கள்ளக்குறிச்சியில் 1,888 பேர் வேட்பு மனுத்தாக்கல் :

கள்ளக்குறிச்சியில் 1,888 பேர் வேட்பு மனுத்தாக்கல் :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரு கட்டங்களாக வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் 3,773 பதவி இடங்களுக்கு நேற்று வரை 1,888 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு ஒரு நபரும்,180 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 15 நபர்களும் மனுத்தாக்கல் செய்துள் ளனர்.

412 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 297 பேரும், 3,162 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 1,575 பேரும் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மொத்தம் 1,888 பேர் நேற்று வரை வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in