Published : 18 Sep 2021 03:14 AM
Last Updated : 18 Sep 2021 03:14 AM

ரயில்வேயில் 50 ஆயிரம் பேருக்கு தொழில் பயிற்சி :

நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ள “பிரதமரின் இலவச தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்’’ கீழ் ரயில்வேயில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி, நாடு முழுவதும் 75 ரயில்வே பயிற்சி கூடங் களில் இந்த பயிற்சிகள் அளிக்கப்பட வுள்ளன. சென்னை பெரம்பூர் கேரேஜ் மற்றும் போத்தனூரில் உள்ள தொழிற்கூடங்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

ரயில்வே அமைச்சர் கூறும்போது: இந்த திட்டத்தின் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்குதொழில் பயிற்சி அளிக்கப்படும் என்றார் .

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x