

பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு நிலம்கொடுத்த உழவர்கள் உரிமை மீட்பு பேரியக்கத்தினர், ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று மண் சோறு தின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை ஒருங்கிணைப்பாளர் ம.ராவணன் தலைமை வகித்தார். மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள் தங்க.சண்முகசுந்தரம், குன்னம் மதியழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருமாந்துறையில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும். கிடப்பில் போடப்பட்டுள்ள பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.