Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

ரூ.5000 லஞ்சம்: நூலக அலுவலர் கைது :

ராமநாதபுரம்

மாற்றுத்திறனாளி நூலக உத வியாளரிடம் பணி நீட்டிப்பு செய்ய ரூ.5,000 லஞ்சம் வாங் கிய ராமநாதபுரம் மாவட்ட நூலக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட (பொ றுப்பு) நூலக அலுவலராக மதுரையைச் சேர்ந்த ஜெ.கண் ணன் (59) பணியாற்றி வருகி றார். திருஉத்தரகோசமங்கை அருகே மல்லல் கிராம நூலகத்தில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி செந்தில் குமார்(35), ரூ.300 தினக் கூலி அடிப்படையில் நூலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். செந்தில்குமார் 89 நாட்கள் பணிமுடித்து, பணி நீட்டிப்பு செய்வதற்காக மாவட்ட நூலக அலுவலர் கண்ணனை அணுகியுள்ளார். அதற்கு நூலக அலுவலர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். தினமும் ரூ.300 சம்பளம் பெறும் செந்தில்குமாரால் ரூ.30 ஆயிரம் லஞ்சமாக கொடுக்க முடியாததால் நேற்று ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் அளித்தார். அதனையடுத்து போலீஸார் அறிவுரையின்படி நேற்று மாலை செந்தில்குமார், மாவட்ட நூலக அலுவல கத்தில் இருந்த நூலக அலுவலர் கண்ணனிடம் முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கொடுத்தார்.

அப்போது அங்கு மறைந் திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி உன்னிகிருஷ்ணன், ஆய்வாளர்கள் ராஜேஸ்வரி, குமரேசன் தலைமையிலான போலீஸார் நூலக அலுவலர் கண்ணனை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x