Published : 15 Sep 2021 03:12 AM
Last Updated : 15 Sep 2021 03:12 AM

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் - வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு : ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன், பா.முருகேஷ் ஆகியோர் பங்கேற்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். அடுத்த படம்: திருவண்ணாமலையில் வரைவு வாக்குச்சாவடிகளின் மறுசீரமைப்பு பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ்.

வேலூர்/திருவண்ணாமலை

வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் சட்டப்பேரவை தொகுதி களுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் குமாரவேல் பாண்டியன், பா.முரு கேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குச்சாவடி பட்டியலை மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டார். மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 1,331 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வரைவு வாக்குச்சாவடி பட்டியல், அனைத்து வாக்குப்பதிவு அலுவலர்களின் அலுவலகமான வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், குடியாத்தம் வரு வாய் கோட்ட அலுவலகம், வேலூர் மாநகராட்சி அலுவலகம் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவலர் அலுவலகமான வட்டாட்சியர் அலுவலகங்களில் வெளியிடப் பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள், பொது மக்கள், தன்னார்வலர்கள், குடியி ருப்போர் நல சங்க உறுப்பினர்கள் எவருக்கேனும் ஆட்சேபனை அல்லது திருத்தங்கள் மேற் கொள்ளப்பட வேண்டுமெனில் தங்களது எழுத்துப்பூர்வமான கடிதங்களை வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளி யிடப்பட்ட 7 தினங்களுக்குள் அளிக்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு பட்டியலை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று வெளியிட்டார்.

பின்னர் அவரது தலைமையில் அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் பா.முருகேஷ் பேசும்போது, “01-01-22-ம் தேதியை அடிப்படை நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலை தயாரிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித் துள்ளது. அதற்கு முன்பாக, 1,500-க்கு மேல் வாக்காளர்களை கொண்ட வாக்குச்சாவடிகளை பிரித்து புதிய வாக்குச்சாவடியை அமைக்க அறிவுறுத்தி உள்ளது.

செங்கம் (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் 2,75,359 வாக்காளர்களும் மற்றும் 323 வாக்குச்சாவடிகளும், திருவண் ணாமலை சட்டப்பேரவைத் தொகுதி யில் 2,85,453 வாக்காளர்களும் மற்றும் 296 வாக்குச்சாவடிகளும், கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,53,362 வாக்காளர்களும் மற்றும் 285 வாக்குச் சாவடிகளும், கலசப்பாக்கம் சட்டப் பேரவைத் தொகுதியில் 2,43,378 வாக்காளர்களும் மற்றும் 281 வாக்குச்சாவடிகளும், போளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2,43,988 வாக்காளர்களும் மற்றும் 285 வாக்குச்சாவடிகளும், ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் 2,76,264 வாக்காளர்களும் மற்றும் 311 வாக்குச்சவாடிகளும், செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் 2,59,747 வாக் காளர்களும் மற்றும் 311 வாக்குச் சாவடிகளும், வந்தவாசி(தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் 2,41,052 வாக்காளர்களும் மற்றும் 280 வாக்குச்சாவடிகளும் உள்ளன. மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 20,78,603 வாக்காளர்களும் மற்றும் 2,372 வாக்குச்சாவடிகளும் உள்ளன.

அரசியல் கட்சி பிரமுகர்கள் பட்டியலை சரிபார்த்து, வாக்குச் சாவடி குறித்த கருத்துக்கள், ஆட்சேபனை இருந்தால், அதன் விவரத்தை வரும் 20-ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

அதன்பிறகு இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு, தேர்தல் ஆணைய ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.

இதில், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, கோட்டாட்சியர்கள் வெற்றிவேல் (தி.மலை), கவிதா (ஆரணி) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x