

புதுவை, கடலூர் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேலும் வலுவடைந்து வடமேற்கு வங்க கடலில் ஒடிசா கடற்கரை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது.
இது ஒடிசா மாநிலம் சந்தபாலி அருகே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக நேற்று புதுச்சேரி, கடலூர் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் தெற்கு அந்தமான் கடற்பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு கவனத்துடன் செல்ல வேண்டும் என்றும், தமிழகத்துக்கு பெரும் பாதிப்பு இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.