வில்லிபுத்தூர் நகை கடையில் மூக்குத்திகள் திருடிய தம்பதி கைது :

வில்லிபுத்தூர் நகை கடையில் மூக்குத்திகள் திருடிய தம்பதி கைது :
Updated on
1 min read

வில்லிபுத்தூர் நகைக்கடை பஜாரில் உள்ள ஒரு நகைக்கடையில் மேலாளராகப் பணியாற்றி வருபவர் முருகன் (48). கடந்த 11-ம் தேதி மாலை அக்கடைக்கு வந்த ஆண், பெண் ஆகிய இருவர் மூக்குத்தி வாங்க வந்துள்ளதாகக் கூறினர். அப்போது மூக்குத்திகளை எடுத்து காட்டிவிட்டு திருப்பி வைத்தபோது 12 மூக்குத்திகள் மாயமானது தெரிய வந்தது.

அதையடுத்து, வில்லிபுத்தூர் பஸ் நிலையத்துக்குச் சென்று ஊழியர்கள் தேடியபோது அவர்கள் சிக்கினர்.

விசாரணையில் அவர்கள் நல்ல குற்றாலபுரம் தெருவைச் சேர்ந்த கணவன், மனைவி சீனிவாசன் - தாமரைக்கனி என்பது தெரிய வந்தது. மேலும், திருட்டுபோன மூக்குத்திகளும் மீட்கப்பட்டன. அவர்களை வில்லிபுத்தூர் நகர் போலீஸார் கைதுசெய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in