Published : 14 Sep 2021 03:14 AM
Last Updated : 14 Sep 2021 03:14 AM

கீரனூர் அருகே பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு :

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கலைக்குடிப்பட்டியில் பழமையான கல்வெட்டை அப்பகுதியைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களான முருகபிரசாத், நாராயணமூர்த்தி, ஜான்சன், ராகுல்பிரசாத் ஆகியோர் அண்மையில் கண்டெடுத்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதா வது:

கலைக்குடிப்பட்டி கண்மாய் கரையோரம் ராமசாமியின் வயலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இக்கல்வெட்டில், 5 வரிகள் எழுதப்பட்டுள்ளன. அதில் சில வரிகள் அழிந்துவிட்டன. எனினும், கல்வெட்டில் மாரி, வயக்கல், கிழத்தி என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் ஒருவரின் மனைவிக்கு சொந்தமான நிலம் என்பதை தெரிவிக்கும் வகையிலான கல்வெட்டு என்பது தெரிகிறது. இக்கல்வெட்டானது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x