Published : 14 Sep 2021 03:15 AM
Last Updated : 14 Sep 2021 03:15 AM

இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் :

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் படித்தவேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி திட்டத்தின் மூலம்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அழகுக்கலை பயிற்சி, சுய வேலைவாய்ப்புக்கான தையல் பயிற்சி, கணக்கு நிர்வாகம், வாகன ஓட்டுநர் பயிற்சி, கணினி பதிவு இயக்குபவர், பொது பணி உதவியாளர், வீட்டு சுகாதார உதவியாளர் போன்ற பயிற்சிகள் நடத்துவதற்கு உரியநிறுவனங்களிடமிருந்து பிரேராணைகள் வரவேற்கப்படுகிறது.

திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் தேசிய திறன் வளர்ப்பு அமைப்பின் இணையதளத்தில் முறையாக பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். பிரதான் மந்திரி கவுசல் கேந்திரா பயிற்சி மையங்களை கொண்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

அரசு மூலம் வழங்கப்படும் திறன்வளர்ப்பு பயிற்சி மற்றும் ஊதிய வேலை வாய்ப்பு திட்டங்களில் இதற்கு முன்பு விதிமுறைகளின்படி சிறப்பாக பயிற்சி அளிக்கப்பட்டதற்கு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான பயிற்சிநிறுவனங்கள் தங்களது நிறுவனம்தொடர்பான முழு விவரங்கள் அடங்கிய தொகுப்பு பிரேராணைகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தென்காசி - 627811 என்ற முகவரிக்கு வருகிற 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என, தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி கவுசல் கேந்திரா பயிற்சி மையங்களை கொண்ட திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x