‘பொக்லைன்’ மூலம் பண்ணை குட்டைகள் அமைப்பு - விவசாயிகள் நூதன போராட்டம் :

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். படம்:இரா.தினேஷ்குமார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள். படம்:இரா.தினேஷ்குமார்.
Updated on
1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.20 கோடியில் 1,121 பண்ணைக் குட்டைகள் அமைக்க ‘பொக் லைன்’ இயந்திரம் பயன்படுத்தப் பட்டுள்ளதை கண்டித்து உழவர் பேரவை சார்பில் திருவண்ணா மலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று நூதனப் போராட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் புருஷோத் தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.20 கோடி மதிப்பில் 1,121 பண்ணைக் குட்டைகள் அமைக் கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மனித உழைப்பை பயன்படுத்தி பண்ணைக் குட்டை அமைக்க வேண்டும். ஆனால், மனித உழைப்பை தவிர்த்து, அவசர கதியில் ‘பொக்லைன்’ இயந்திரத்தை பயன்படுத்தி முடித்துள்ளனர். இதனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் ஏமாற் றப்பட்டுள்ளனர்.

ரூ.1.78 லட்சம் மதிப்பில் பண்ணைக் குட்டைக்கு 15 மணி நேரத்தில் ‘பொக்லைன்’ இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப் பட்டுள்ளது. ஒரு பண்ணைக் குட்டைக்கு 630 மனித உழைப்பு நாட்களை கணக்கீட்டு பணி வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு வழங்காமல் ‘பொக்லைன்’ இயந்திரத்தை பயன்படுத்தி முடித்துள்ளனர். இதனால், ஒரு மனித உழைப்புக்கு கிடைக்க வேண்டிய ரூ.273 கூலித் தொகையில் ரூ.73 மட்டுமே கிடைத்துள்ளது. ‘பொக்லைன்’ இயந்திரம் பயன்படுத்தப்பட்டதை கண்டிக்கிறோம்” என்றார்.

பின்னர், ‘பொக்லைன்’ இயந் திரம் மூலம் பள்ளம் தோண்டி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத் தொழிலாளர்கள் சோற்றில் மண் போடப்பட்டுள்ளதாக நடித்து காண்பித்து விவசாயிகள், நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in