தமிழகத்தில் நடைபெறும் கட்டுமானத் தொழிலில் - 90 சதவீத வேலைகளை தமிழருக்கே வழங்க வேண்டும் : சிறப்பு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழகத்தில் நடைபெறும் கட்டுமானத் தொழிலில் -  90 சதவீத வேலைகளை தமிழருக்கே வழங்க வேண்டும் :  சிறப்பு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு கோரிக்கை
Updated on
1 min read

தமிழகத்தில் நடைபெறும் கட்டுமான தொழிலில் 90 சதவீத வேலைகளை தமிழக தொழி லாளர்களுக்கே வழங்கும் வகையில் சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு கட்டுமான பெண் தொழிலாளர் மாநில மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஏஐடியுசி கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் 'அமைப்பாய் திரள்வோம்' என்ற தலைப்பிலான கட்டுமான பெண் தொழிலாளர் மாநில மாநாடு திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. ஏஐடியுசி தேசியச் செயலாளர் வகிதா நிஜாம் தலைமை வகித்தார்.

இதில், மாநில அரசின் உரிமை களை பறிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வரும் சமூக பாதுகாப்பு திட்டத்தை முறியடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் உயர்கல்வி பெற ஊக்கமளிக்கவும், தொழில் பயிற்சி அளிக்கவும் தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும். சித்தாள் வேலைக்குச் சேரக்கூடிய பெண்களுக்கு கொத்தனார், கம்பி வளைப்பவர், எலெக்ட்ரீசியன், பிளம்பர், பெயின்டர் உள்ளிட்ட தொழில் பயிற்சி அளித்து அவர்களின் வாழ்வாதாரம் உயர தமிழ்நாடு அரசு தனித்திட்டம் வகுத்து நிறைவேற்ற வேண்டும்.

பெண் கட்டுமானத் தொழிலா ளர்களுக்கு பேறு காலப் பயன்கள் சட்டப்படி குறைந்தபட்சம் 6 மாத சம்பளத் துடன் விடுப்பு அளிக்க வேண்டும். விடுப்பு காலத்துக்கு மாதம் ரூ.15 ஆயிரம் வீதம் 6 மாதத்துக்கு வழங்க வேண்டும்.

கட்டுமான வேலைகளை நம்பி தமிழகத்தில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். வெளிமாநிலத்தவர்களின் வருகையால் பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்பு 80 சதவீதத்துக்கும் கீழாக குறைந்துவிட்டது. எனவே, தமிழகத்திலுள்ள அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலில் 90 சதவீத வேலைகளை தமிழக தொழிலாளர்களுக்கே வழங்கும் வகையில் தமிழக அரசு சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.

பெண் கட்டுமானத் தொழி லாளர்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்கும் திருமண உதவித்தொகையாக ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். இஎஸ்ஐ திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.

பணியிடத்தில் பாலியல் துன்பு றுத்தல் இல்லாத நிலை உரு வாக்கப்பட வேண்டும். குறைந் தபட்சம் மாதம் ரூ.6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பெண்கள் ஓய்வுபெறும் வயதை 50 ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில், சங்க பொதுச்செய லாளர் கே.ரவி, ஏஐடியுசி திருச்சி மாவட்டத் தலைவர் க.சுரேஷ், செயலாளர் சி.செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in