கிராம கோயில் பூசாரிகளுக்கு மாவட்டந்தோறும் ஆலய ஆகம பயிற்சி முகாம் நடத்த வேண்டும் : பூஜாரிகள் முன்னேற்ற நலச் சங்கம் கோரிக்கை

கிராம கோயில் பூசாரிகளுக்கு மாவட்டந்தோறும் ஆலய ஆகம பயிற்சி முகாம் நடத்த வேண்டும் :  பூஜாரிகள் முன்னேற்ற நலச் சங்கம் கோரிக்கை
Updated on
1 min read

கிராம கோயில் பூசாரிகளுக்கு அரசு சார்பில் மாவட்டந்தோறும் ஆலய ஆகம பயிற்சி முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பூஜாரிகள் முன்னேற்ற நலச் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

பூஜாரிகள் முன்னேற்ற நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் அதன் நிறுவனர், மாநில பொதுச் செயலாளர் கே.கே.சதீஸ்கண்ணன் தலைமையில் தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டு பாட்டில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஆயிரக்கணக்கான கோயில்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. எனவே சிதிலமடைந்த அனைத்து கோயில்களையும் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த அனைத்து நடவடிக்கைகளை யும் அரசு எடுக்க வேண்டும்.

கிராம கோயில் பூசாரிக ளுக்கு புதிய நல வாரிய அட்டைகள் வழங்காததால், எந்த நலத்திட்டத்திலும் பூசாரி களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் உள்ளன. இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ள பெரிய கோயில் களில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கிராம கோயில் பூசாரிகளின் குடும்பத்தில் படித்த குழந்தைகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.

கிராம கோயில் பூசாரிக ளுக்கு அரசு சார்பில் மாவட்டந்தோறும் ஆலய ஆகம பயிற்சி முகாம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழ்மை நிலையில் வீடு இல்லாமல் உள்ள பூசாரிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதில், மாநிலத்தலைவர் டி.ராஜேந்திரன், மாநில துணைத் தலைவர் எஸ்.கதிர் வேல், பொருளாளர் ஆர்.ரதி தேவி, மாவட்டச் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in