Published : 13 Sep 2021 03:15 AM
Last Updated : 13 Sep 2021 03:15 AM

வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை கல்லூரியில் - மாணவர்களுக்கான 3-ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு :

வேலூர்

வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை கல்லூரியில் 3-ம் கட்ட மாணவர் கலந்தாய்வு நாளை (14-ம் தேதி) நடைபெறுகிறது. அதேபோல, முதுகலை மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை மறுதினம் (15-ம் தேதி) நடைபெறுகிறது. என கல்லூரி முதல்வர் மலர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் அரசினர் முத்துரங்கம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பாடப் பிரிவு நடப்பு (2021-22) கல்வி யாண்டுக்கான மாணவர் சேர்க்கை 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், 3-ம் கட்ட கலந்தாய்வு நாளை (14-ம் தேதி) காலை 9.30 மணியளவில் நடைபெறும். இதில், பிஏ வரலாறு, பிஏ பொருளியல், பி.காம், பிபிஏ, பிஎஸ்சி கணிதம், பிஎஸ்சி இயற்பியல், பிஎஸ்சி வேதியியல், பிஎஸ்சி கணினி அறிவியல், பிஎஸ்சி விலங்கியல், பிஎஸ்சி ஊட்டச் சத்து மற்றும் உணவுக்கட்டுப் பாட்டியல் ஆகிய 10 பாடப் பிரிவுகளில் நிரப்பப்படாமல் உள்ள இடங்களுக்கு இனச்சுழற்சி வரிசையில் சேர்க்கை நடைபெற உள்ளது.

அதன்படி BC-98, BCM-21, MBC(V)-15, DNC 43, MBC(O)12, SC-82, SCA-18, ST-06 என்ற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். எனவே, 319.9-ல் இருந்து 310 வரையிலான ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் பெற்ற இனச்சுழற்சி மாணவ, மாணவிகள் மட்டும் இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.

அதேபோல, முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு நடப்பு கல்வி யாண்டுக்கான மாணவர் சேர்க்கை முதற் கட்ட கலந் தாய்வு நாளை மறுதினம் (15-ம் தேதி) காலை 9.30 மணியளவில் நடைபெறுகிறது.

முதுநிலை பாடப்பிரிவுக்கான கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவர்கள் கலந்தாய்வு நடைபெறும் நாளில் தங்களது உண்மைச்சசான்றிதழ்களான அச்சிடப்பெற்ற விண்ணப்பம் மற்றும் உறுதிமொழி படிவங்கள், இளங்கலை மதிப்பெண் பட்டியல் (All Semesters) தொகுப்பு மதிப்பெண் பட்டியல் (consolidated Marksheet), மாற்றுச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, வருமானச்சான்றிதழ், வங்கிக்கணக்குப் புத்தகம் ஆகிய வற்றுடன் அதன் நகல்களுடன் ஒப்படைக்க வேண்டும். அந்த சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே மாணவர்களின் சேர்க்கை உறுதி செய்யப் படும். இதற்கான சேர்க்கைக் கட்டணம் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு (எம்ஏ., எம்.காம்) திருவள்ளுவர் பல் கலைக்கழகம் ரூ.1,740, மற்ற பல்கலைக்கழகம் ரூ.2,240.

அறிவியல் பாடப்பிரிவு (எம்எஸ்சி), திருவள்ளுவர் பல் கலைக்கழகம் ரூ.1,770, மற்ற பல்கலைக்கழகம் ரூ.2,270, கணினி அறிவியல் பாடப்பிரிவு (எம்எஸ்சி) திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ரூ.1,870, மற்ற பல்கலைக்கழகம் ரூ.2,370 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவல் காரணமாக கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோரை அழைத்து வருவதை தவிர்த்து, கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, முகக்கவசத்துடன் கலந்து கொள்ளலாம்’’. என அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x