

திருவண்ணாமலை மாவட்டத்தில் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நீர்நிலைகளில் நேற்று விஜர்சனம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 10-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி ‘களிமண்ணால்’ செய்யப் பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி சென்று, வீடுகளில் வைத்து வழிபாடு செய்தனர்.
பின்னர், விநாய கருக்கு கொழுக்கட்டை, சுண்டல், கொய்யாப்பழம், பேரிக் காய், விலாம்பழம், நாவல்பழம், அவல் பொறி, நெற்கதிர், கம்பு, கேழ்வரகு மற்றும் சோளம் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்தனர்.
வீடுகளில் வைத்து 3 நாட்களாக வழிபாடு செய்து வந்த விநாயகர் சிலைகளை, நீர்நிலைகளில் விஜர்சனம் செய்யும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. நீர்நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த பக்தர், பின்னர் சிலையை பயபக்தியுடன் நீர்நிலை களில் கரைத்தனர். அப்போது பலர் விநாயகர் மந்திரத்தை உச்சரித்தனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி, நீர் நிலைகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.