

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப்நந்தூரி முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் கரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கடந்த 5-ம் தேதி நிலவரப்படி 3.32 கோடி பயனாளிகளுக்கு அரசு தடுப்பூசி முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 2.63 கோடி பயனாளிகள் முதல் தவணையும், 68.91 லட்சம் பயனாளிகளுக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி அடுத்த நிலைக்கு துரிதப்படுத்தும் விதமாகஇன்று (செப். 12) மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப் பூசி செலுத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
அதன்படி கடலூர் மாவட்டத் தில் 909 மையங்களில் அனைத்துபகுதிகளிலும் சிறப்பு முகாம்நடைபெற உள்ளது.
நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக் கான 1 லட்சத்து 70 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி வழங்கும் வகையில் அலுவலர்கள் நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். இன்று காலை 7 மணி முதல்மாலை 7 மணி வரை அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் நடைபெறவுள் ளதை பொதுமக்கள் அறியும் வகையில் தண்டோரா மூலமாகவும், ஒலிப்பெருக்கி மூலமாகவும், வீடுவீடாக துண்டுபிரசுரங்கள் வழங்கியும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
8 குழுக்கள் வட்டார வாரியாக உள்ள பொறுப்பு அலுவலர்கள் கண்காணிப்பு மற்றும் மேற் பார்வை அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறன்பட மேற்கொண்டு தகுதியானஅனைவருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற் றும் திட்ட இயக்குநர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், விருத்தாசலம் சார்-ஆட்சியர் அமித்குமார், கட லூர் வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.