

மருத்துவம், பொறியில் நுழைவுத் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து, விழுப்புரத்தில் இயங்கி வரும் குமார்ஸ் வெற்றி கல்வி மையத்தில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நடப் பாண்டு நீட் அரசுத் தேர்வு வரும்12-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் பொருட்டு கல்வி மையத்தில் சார்பில் இலவச மாதிரி தேர்வு நடைபெற்றது.
இத்தேர்வில் ஆங்கில் வழியில் 70 மாணவ, மாணவிகளும், தமிழ் வழியில் 25 மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வினா தாள் வழங்கப்பட்டு, அதன்பின் தீர்வு களுக்கான நகல் வழங்கப்பட்டன.
இத்தேர்வை கல்வி மையத்தின் நிறுவன தலைவர் கோத.குமார், கோத. செல்வகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இத்தேர்வின் போது அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் கார்த்திகேயன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் முன்னாள் நேர்முக உதவியாளர் சண்முகம் , மேலாளர் சரவணன், வேதியியல் துறை ஆசிரியர் செந்தில், உயிரியல் துறை ஆசிரியர் உதயகுமார், இயற்பியல் துறை ஆசிரியர் ராஜ், கணிதத் துறை ஆசிரியர் குபேர், கணிப்பொறியாளர் சங்கர் கணேஷ், ஆசிரியர்கள் சீனுவாசன், பரதன் ஆகியோர் மேற்பார்வை பணியில் ஈடுபட்டனர்.