தேக்கு மரம் பதுக்கியவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம் :

தேக்கு மரம்  பதுக்கியவர் கைது: ரூ.1 லட்சம் அபராதம் :
Updated on
1 min read

ஈரோடு மாவட்டம் சென்னம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தண்டா வடக்கு பிரிவு காப்புக்காடு வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் செங்கோட்டையன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.அப்போது சின்னமலை அடிவாரம் வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த நபரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், அவர் கொளத்தூர் அருகே உள்ள லக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாதேஷ் எனத் தெரியவந்தது. 6 அடி நீளம் கொண்ட நான்கு தேக்கு மரக்கட்டைகள் மற்றும் ஒரு நாட்டுத் துப்பாக்கி ஆகியவை பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டடது. மேலும், 250 கிராம் மான்கறி வத்தல் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது

இதையடுத்து அவரை கைது செய்த வனத்துறையினர் அவரிடம் இருந்து தேக்கு மரக்கட்டைகள், துப்பாக்கி மற்றும் மான்கறி வத்தல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், மாதேஷுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in