சிதம்பரத்தில் விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் :

சிதம்பரத்தில்  விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு  கூட்டம் :
Updated on
1 min read

சிதம்பரத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்டம் கூட்டம் நேற்று நடந்தது. காங்கிரஸ் (தெற்கு)மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சுப்பிரமணியம், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் மாதவன், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கீரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாலஅறவாழி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் கான்சாகிப் பாசன விவசாய சங்கத் தலைவர் கண்ணன்,கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 27-ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை கடலூர் மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்திட முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in