கொல்லிமலையில் காவலர் மர்ம மரணம் :

கொல்லிமலையில் காவலர் மர்ம மரணம் :

Published on

நாமக்கல் அருகே உள்ள பொட்டிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (33). இவர் நாமக்கல் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக காவல் நிலையத்திற்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும், கொல்லிமலைக்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கொல்லிமலை சின்னனூர்நாடு சோளப்பள்ளம் என்ற இடத்தில் ஆனந்தன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

தகவல் அறிந்த வாழவந்திநாடு காவல் துறையினர் விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in