கோபி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று :

கோபி அருகே அரசுப் பள்ளி மாணவிக்கு கரோனா தொற்று :

Published on

ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி அரசுப் பள்ளியில் ஒரு மாணவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று பரவவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கோபியை அடுத்த சிறுவலூர் மணியக்காரன்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவி படிக்கும் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in