தாமிரபரணி ஆற்றங்கரையில் - 1 லட்சம் மரக்கன்றுகள் நட திட்டம் :

திருநெல்வேலியில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் சக்திநாதன் நினைவஞ்சலி கூட்டத்தில், ‘மிஷன் கிளீன் தாமிரபரணி’ என்ற ஆவணப்படத்தின் குறுந்தகட்டை  ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்டார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக முன்னாள் முதல்வர் சக்திநாதன் நினைவஞ்சலி கூட்டத்தில், ‘மிஷன் கிளீன் தாமிரபரணி’ என்ற ஆவணப்படத்தின் குறுந்தகட்டை ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்டார்.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு, சிற்றாறு, அனுமன் நதி மற்றும் பல்வேறு குளங்கள் என்று நீர்நிலை பாதுகாப்பு, பராமரிப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ‘வாட்டர் வாரியர்’ விருதுபெற்ற அண்ணா பல்கலைக் கழக முன்னாள் முதல்வர் டாக்டர் சக்திநாதனின் நினைவு அஞ்சலி கூட்டம் மகாராஜ நகர் ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

ஆட்சியர் வே.விஷ்ணு, மாவட்டஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பழனி, நம் தாமிரபரணி ஒருங்கிணைப்பாளர்கள் நல்லபெருமாள், வித்யாசாகர், கல்யாணராமன், சிகாமணி, அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர் சரவணன், பெரியகுளம் பாதுகாப்பு கமிட்டி தலைவர் ஆறுமுகம், வாச்சார் குளம் பாதுகாப்பு குழுத் தலைவர் சக்தி பிரபாகரன், வேய்ந்தான்குளம் பாதுகாப்பு கமிட்டி செயலாளர் லாசர், மாநகராட்சி நீர்நிலை பாதுகாப்பு கமிட்டி தலைவர் சண்முகசுந்தரம், அரும்புகள் டிரஸ்ட் மதிவாணன், மூத்த குடிமக்கள் பேரவை தலைவர் ராஜா லைனல், என்ஜிஒ. ஏ காலனி நலச்சங்க துணைத் தலைவர் சுவாமி உள்ளிட்டோர் சக்திநாதன் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

தாமிரபரணி ஆற்றின் கரைகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட தீர்மானித்து, ஆயிரம் மரக்கன்றுகள் நீர்நிலைதன்னார்வலர்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in