

வேலூர் விருப்பாட்சிபுரம் அரசன் குளம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ஏழுமலை(66). இவர், கடந்த மாதம் 28-ம் தேதி தனது விவசாய நிலத்துக்கு அவரது காளை மாடுகளை ஓட்டிச் சென்றார்.அப்போது திடீரென காளை மாடு ஒன்று ஏழுமலையை முட்டி தூக்கி வீசியது. இதில் ஏழுமலையின் கழுத்து எலும்பு முறிந்தது. உடனடியாக மீட்கப்பட்ட ஏழுமலை வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து பாகாயம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.