கடலூர் மாவட்டத்தில் - 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு :

கடலூர் மாவட்டத்தில்  -  11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் 11 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் பணியில் சிறப்பாக செயல்படுவோருக்கு தமிழக அரசு ஆண்டு தோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அதன் படி 2021-22ம் ஆண்டுக்கான நல்லாசிரியர் விரு துக்கு கடலூர் மாவட்டத்தில் இருந்து 11 பேர் தேர்வாகி உள்ளனர். அதன்படி பூவாலை அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தியாகராஜன், குறிஞ்சிப்பாடி ச.கு. வேலாயுதம் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் நவ ஜோதி, புதுப்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் வெற்றிவேல், பண்ருட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் மோகன் குமார் ஆகி யோர் தேர்வாகி உள்ளனர்.

இதேபோல் த.சோ.பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் ரவி, கத்தாழை ஊராட்சிநடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கார்த்திக் ராஜா, சிதம்பரம் மாலைக்கட்டி தெரு நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரி யர் ஜெயா, சித்தரசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடை நிலை ஆசிரியர் சாம்விக்டர் மதன் லால் ஆகியோரும் தேர்வாகி உள்ளனர்.

மேலும் குமராட்சி ஒன்றியம் முள்ளங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கவிதா, குறிஞ்சிப்பாடி ஒன்றி யம் பூண்டியாங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கலையரசி, நெய்வேலி 17-வது வட்டம் ஜவகர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சோபனா ஆகியோ ரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in