ராமேசுவரத்தில்  -  2 விசைப்படகுகள் பறிமுதல் :

ராமேசுவரத்தில் - 2 விசைப்படகுகள் பறிமுதல் :

Published on

ராமேசுவரத்தில் அனுமதிச்சீட்டு பெறாமல் மீன்பிடிக்கச் சென்றது தொடர்பாக 2 படகுகளை மீன் வளத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், மீன்வளத் துறையிடம் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. இந்நிலையில் சில படகுகள் அனுமதிச்சீட்டு பெறா மல் சென்றதாக ராமேசுவரம் மீன்வளத் துறையினருக்கு தக வல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் மீன்பிடித்துவிட்டு நேற்று காலை கரை திரும்பிய விசைப்படகுகளை, மீன்வளத்துறையினர் மற்றும் மீன்வளச் சட்ட அமலாக்கத் துறை போலீஸார் சோதனையிட்டனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த டார்வின், சில்வஸ்டோன் ஆகிய இருவரது படகுகளும் அனு மதிச்சீட்டு பெறாமல் மீன்பிடிக்கச் சென்றது தெரிய வந்தது. 2 படகு களையும் பறிமுதல் செய்து மீன் வளத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in