Published : 06 Sep 2021 03:16 AM
Last Updated : 06 Sep 2021 03:16 AM

பொன்மலை தியாகிகள் நினைவுத் தூணுக்கு மரியாதை :

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் சார்பு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நடைபெற்ற பொன்மலை தியாகிகள் தின நிகழ்ச்சியில், தியாகிகள் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

1946-ம் ஆண்டு செப்.5-ம் தேதி பொன்மலையில் தங்களது உரிமைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே தொழிலாளர்கள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொழிலாளர்கள் தங்கவேலு, தியாகராஜன், ராஜூ, ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உயிர் நீத்தனர்.

இவர்கள் நினைவாக, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆண்டுதோறும் பொன்மலை தியாகிகள் தினம் கடைபிடிக் கப்படுகிறது. அதன்படி, 75-வது ஆண்டு பொன்மலை தியாகிகள் தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, நேற்று பொன் மலை தியாகிகள் நினைவுத் தூணுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தலைமையில் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.தர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், டிஆர்இயு செயல் தலைவர் ஜானகிராமன், சிஐடியு பொதுச் செயலாளர் சுகுமாறன், ஏஐடியுசி மாநிலப் பொதுச் செயலாளர் மூர்த்தி மற்றும் சிஐடியு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, தியாகிகள் தின கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் பேசியது:

பிரதமர் மோடி அரசின் கொள் கைகளை எதிர்த்து செப்.27-ம் தேதி நடைபெறவுள்ள போராட்டத்தில் தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர். மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து, 19-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து, குமரி முதல் இமயம் வரை வீடு வீடாக பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன என் றார்.

மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசும்போது, “ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம்தான் முதல் ஊதியக் குழு உருவாக காரணம். 8-வது ஊதியக் குழு இருக்குமா என்பது தெரியாது” என்றார்.

பொன்மலை தியாகிகள் தினத் தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் டிஆர்இயு சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

சிஐடியு மாநகர் மாவட்டக் குழு சார்பில் பாலக்கரை ரவுண்டா னாவில் தொடங்கி மேலப்புதூர், குட்ஷெட், டோல்கேட் வழியாக பொன்மலை வரை இருசக்கர வாகனப் பேரணி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x