அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை விமர்சித்தோருக்கு உயர் நீதிமன்றமே பதிலளித்துவிட்டது : தி.க தலைவர் கி.வீரமணி கருத்து

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தை விமர்சித்தோருக்கு உயர் நீதிமன்றமே பதிலளித்துவிட்டது :  தி.க தலைவர் கி.வீரமணி கருத்து
Updated on
1 min read

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், தமிழில் அர்ச்சனைத் திட்டம் ஆகியவற்றை விமர்சனம் செய்பவர்களுக்கு உயர் நீதிமன்றமே பதில் அளித்துவிட்டது என தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சமூக நீதிக்கு ஆதரவாகவே எப்பொழுதும் செயல்பட்டார். தேசிய இயக்கத்தில் இணைந்து பணியாற்றிய அவர், இயக்கத்துக்குள் என்ன நிலைப்பாடு எடுத்தாலும், சமூகநீதி பாதையிலேயே இருந்தார். பெரியாரை தன்னுடைய குரு எனக் கூறியவர் வ.உ.சிதம்பரனார். அவருடைய பிறந்த நாள் தற்போது அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு நிறைவேற்றிய அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டம், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டம் ஆகியவற்றை விமர்சனம் செய்பவர்களுக்கு உயர் நீதிமன்றமே பதில் அளித்துவிட்டது. உயர் நீதிமன்றத்தின் மூலம் அவர்களுக்கு தோல்வி கிடைத்துள்ளது என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in