திருச்செந்தூர் ஆவணித் திருவிழா 10-ம் நாளில் - வள்ளி, தெய்வானையுடன் ரதத்தில் வலம் வந்த குமரவிடங்கப் பெருமான் :

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் ஆவணித் திருவிழா 10-ம் நாளில் சுவாமி குமரவிடங்கப் பெருமான், வள்ளி தெய்வானையுடன் ரதத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தார்.
திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் ஆவணித் திருவிழா 10-ம் நாளில் சுவாமி குமரவிடங்கப் பெருமான், வள்ளி தெய்வானையுடன் ரதத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தார்.
Updated on
1 min read

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் ஆவணித் திருவிழா 10-ம் நாளான நேற்று தேரோட்டத்துக்கு பதிலாக சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி தெய்வானையுடன் ரதத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் வலம் வந்தார்.

பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு திருவிழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோயில் உள்பிரகாரத்தில் வைத்து நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதியில்லை.

திருவிழாவின் 7-ம் நாளான கடந்த 2-ம் தேதி சிவப்பு சார்த்தியும், 8-ம் நாளான 3-ம் தேதி காலையில் வெள்ளை சார்த்தியும், பகலில் பச்சை சார்த்தியும் சுவாமி சண்முகர் உள்பிரகாரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.

ஆவணித் திருவிழாவில் 10-ம் நாளில் ஆண்டு தோறும் தேரோட்டம் நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடைபெற வில்லை. தேரோட்டத்துக்கு பதிலாக, விநாயகர் முதலில் ரத வாகனத்தில் ஐராவதம் மண்டபத்தில் இருந்து எழுந்தருளி கோயில் உள்பிரகாரத்தில் உலா வந்தார். தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி தெய்வானையுடன் ரதத்தில் எழுந்தருளி உள்பிரகாரத்தில் உலா வந்தார். பின்பு வள்ளி அம்பாள் ரதத்தில் எழுந்தருளி உள் பிரகாரத்தை சுற்றி வந்தார். இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நிகழ்ச்சிகள் இணையதளம் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. 12 நாள் ஆவணித் திருவிழா நாளை (செப்.7) நிறைவடைகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in