நெல்லை, தென்காசி மாவட்டங்களில் - 19 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது :

திருநெல்வேலியில் நடந்த விழாவில் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார். (வலது) தென்காசியில் நடந்த விழாவில் ஆசிரியர்களுக்கு ஆட்சியர் கோபால சுந்தரராஜ் விருது வழங்கினார்.
திருநெல்வேலியில் நடந்த விழாவில் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை ஆட்சியர் விஷ்ணு வழங்கினார். (வலது) தென்காசியில் நடந்த விழாவில் ஆசிரியர்களுக்கு ஆட்சியர் கோபால சுந்தரராஜ் விருது வழங்கினார்.
Updated on
1 min read

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 9 நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தலைமை வகித்து, வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ், ரொக்கப் பரிசு வழங்கினார்.

வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை மாலதி, நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆசிரியை விஜயராணி, சங்கரன்கோவில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் நாராயணன், தென்காசி நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர் வின்சென்ட், கோதை நாச்சியார்புரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை ரூத் ஜெயத்தாய், பழங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், ஆனைகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் மோதிலால், வீரசிகாமணி விவேகானந்தா வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி துணை முதல்வர் கோமாசெல்வம் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்றனர்.

நிகழ்ச்சியில், தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி, தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் கோகிலா, சங்கரன் கோவில் கல்வி மாவட்ட அலு வலர் ராமசுப்பு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி

கல்லிடைக்குறிச்சி திலக் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பண்டாரசிவன், பொதுக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரசாத், மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் இசபெல்லா செல்லகுமாரி, மூலக்கரைப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியை சாரதா, அரிகேசவநல்லூர் இந்து நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ராமசுந்தர், மலையான் குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பெபேயாள் எப்சிபாய், இடையன் குடி டிடிடிஏ நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சாமுவேல், திருநெல்வேலி டவுன் இந்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் சங்கரன், பேட்டை மகாத்மா காந்தி மெட்ரிக் பள்ளி முதல்வர் ஐயம்மாள் வள்ளி, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சாந்தி ஆகியோர் விருது பெற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in