Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

உழவர் சந்தையில் காய்கறி விற்க விவசாயிகளுக்கு அனுமதி இலவசம் :

உழவர் சந்தையில் காய்கறி விற்க விவசாயிகளுக்கு அனுமதி இலவசம் என்று கடலூர் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) பா.பிரேம்சாந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடலூர் மாவட்டத்தில் 5 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன. தமிழக அரசு வழிகாட்டுதலின் படி, இதனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை விவசாயிகள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

உழவர் சந்தையில் சந்தை அடையாள அட்டை உள்ள விவசாயிகளுக்கு அனுமதி இலவசம்; கடைக்கு வாடகை கிடையாது. இடைத்தரகர்கள் இன்றி நுகர்வோரிடம் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு உரிய லாபம் கிட்டும்.

விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை உழவர் சந்தைக்கு எடுத்து வருவதற்கு கட்டணமில்லா அரசு பேருந்து வசதி உள்ளது. விற்பனை முடித்து மீதமுள்ள காய்கறிகளை சேமித்து வைக்க கட்டணமில்லா குளிர்பதன வசதிகள் இருக்கின்றன.

மேலும், வேளாண் துறை மூலம், புதிய சாகுபடி தொழில்நுட்ப உத்திகள் மற்றும் பிற அரசு திட்ட மானியங்கள் அறியும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உழவர் சந்தைகளில் புதிதாக கடை போட விரும்பும் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உழவர் சந்தை அலுவலர்களை கடலூர் - 63818 08995, 90949 04688, விருத்தாசலம் - 96005 65046, 98655 80205, சிதம்பரம் - 99942 95440, 74020 61509. வடலூர்-94869 86388, 80720 33855 மற்றும் பண்ருட்டி - 93456 02078, 93843 32470 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x