

தேனி மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்கள் விவரம் வருமாறு:
ரெங்கசமுத்திரம் அரசு மேல் நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் த.வெங்கடேஷ்குமார், சண்முக சுந்தரபுரம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பா.ஜான்சன், சில்லமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் அ.சின்னராஜ், ஊஞ்சாம்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் தே.சுகந்தி, கம்பம் முக்தி விநாயகர் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கு.கணேசன், கோம்பை கன்னிகா பரமேஸ்வரி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கி.சித்ரா, அழகாபுரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை ரெ.தமிழ்ச்செல்வி, சின்னமனூர் தி மேயர்ராம் மெட்ரிக் பள்ளி முதல்வர் க.சிவராமச்சந்திரன், உத்தமபாளையம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் சீ.பிரபு ஆகியோர் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளனர்.