அவிநாசி கிளை சிறையில் கைதி உயிரிழப்பு - சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் :
சங்கரன்கோவிலை சேர்ந்தவர் தென்காசி தங்கபாண்டியன் மகன் கட்டிசாமி (40). கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தங்கும் விடுதியில் ஊழியராக பணியாற்றிவந்தார். ஒரு வழக்கு தொடர்பாக,கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் போலீஸாரால் கைது செய்யப்பட்ட கட்டிசாமி, கடந்த 30-ம் தேதி அவிநாசி கிளை சிறையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, உடல்நிலை சரியில்லாததால், கடந்த 1-ம் தேதி அவிநாசி அரசுமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கட்டிசாமி உயிரிழந்தார். நேற்று காலை திருப்பூர்அரசு தலைமை மருத்துவமனையில் அவிநாசி நீதிபதி விபிசி முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. கட்டிசாமியின் மனைவிக்கு அரசுவேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தாருக்கு நிவாரணத்தொகை வழங்கக் கோரி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிவாரணத் தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் மற்றும் போலீஸார் தெரிவித்ததால், போராட்டம் முடிவுக்கு வந்தது.
