விருதுநகர் மாவட்டத்தில் - மாநில நல்லாசிரியர் விருதுக்கு 11 பேர் தேர்வு :

விருதுநகர் மாவட்டத்தில் -  மாநில நல்லாசிரியர் விருதுக்கு 11 பேர் தேர்வு :
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 11 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களது பெயர் விவரம் வருமாறு:

நாரணாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் ப.கருணைதாஸ், ம.ரெட்டியாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சு.ஜெயராஜ், ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பூ.அ.ரமேஷ், விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சந்திரமோகன். மல்லாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளி பட்டதாரி (அறிவியல்) ஆசிரியர் அ.இளங்கோ, சாத்தூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆரோக்கியராஜா, தளவாய்புரம் ஜீவா நகர் ஆ.மு.அருணாசல நாடார் ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சி புஷ்பலதா, திருச்சுழி மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜாக்குலின் ஜூலியட். வில்லிபத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை (ஆங்கிலம்) சந்திராமேரி, காரியாபட்டி சாலைமறைக்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் மாலதி, வில்லிபுத்தூர் கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி (கணிதம்) ஆசிரியர் ப.கார்த்திகேயன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in