பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை :
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை வரவேற்று, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு தமிழ்ப் புலிகள் கட்சியினர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர் ரமணா, மேற்கு மண்டலச் செயலாளர் ரமேஷ், புத்தூர் அக்ரஹாரம் பகுதியில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்கீழ் அர்ச்சகராக நியமிக்கப்பட்ட சிவசங்கர் மற்றும் அர்ச்சகர் பயிற்சி முடித்த விநாயகமூர்த்தி, அறிவுச்செல்வன் உள்ளிட்டோர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேயுள்ள பெரியார் சிலைக்கு நேற்று, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில், கட்சியின் கொள்கை பரப்பு மாவட்டச் செயலர் ஆதி அரசு, மாநகரச் செயலர் கார்த்திக், இளைஞரணி மாவட்டச் செயலர் வரதன், ரெட் பிளாக் கட்சி மாநிலத் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
