பேராசிரியர் வீட்டில் திருடிய மூவர் கைது : 30 பவுன் நகைகள் பறிமுதல் :

பேராசிரியர் வீட்டில் திருடிய மூவர் கைது : 30 பவுன் நகைகள் பறிமுதல் :
Updated on
1 min read

14-ம் தேதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவுப் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ உடைக்கப்பட்டு, 30 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தன. புகாரின் பேரில் வடவள்ளி போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், போலீஸார் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்கள் தென்னமநல்லூர் பகுதியைச் சேர்ந்த குட்டி என்ற அஜித்குமார்(25), ஆனந்த்(27), ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தைச் சேர்ந்த ராஜிவ் என்ற ரஜீப்(23) என்பதும், பேராசிரியர் வீட்டில் நகை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. அஜித்குமார் பாத்திர வியாபாரம் செய்கிறார். ராஜிவ், ஆனந்த் ஆகியோர் கட்டிட வேலைக்குச் சென்று வந்துள்ளனர். மூவரையும் வடவள்ளி போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 30 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in