Published : 03 Sep 2021 03:15 AM
Last Updated : 03 Sep 2021 03:15 AM

முஷ்ணம் ஒன்றிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு :

கடலூர்

முஷ்ணம் ஒன்றியத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கான தேர்தல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

முஷ்ணம் ஒன்றியத்தில் காலியாக உள்ள 10-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர், கார்மாங்குடி மற்றும் பேரூர் ஊராட்சித் தலைவர், ஆதி வராகநல்லூரில் 2-வது வார்டு உறுப்பினர், நெடுஞ்சேரியில் 6-வது வார்டு உறுப்பினர், பாளையங்கோட்டை மேல்பாதியில் 4-வது வார்டு உறுப்பினர் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு தேர்தல் தேதி அறிவித்தவுடன் தேர்தல்நடைபெற உள்ளது.

இதற்கான வரைவு வாக்காளர் பட்டியலை முஷ்ணம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியும், வட்டார வளர்ச்சி அலுவலருமான ஜெயந்தி வெளியிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x