

சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மானிய கோரிக்கையின் போது விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தைஅண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் நினைத்து தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அந்தவகையில் விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்ட 688 பேர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மீது விழுப்புரம் மாவட்ட போலீஸார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.