

ஈரோடு: மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம் தாளவாடியில்7-ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு மாவட்டம், தாளவாடியில் உள்ள மலைவாழ் மாற்றுத்திறனாளிகள் பயன்பெற தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு, முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு, மாதாந்திர உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் பதிவு செய்திட சிறப்பு முகாம் 7-ம் தேதி நடக்கிறது. தாளவாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கும் இம்முகாமில், பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களது அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் - 3, ஆதார், குடும்ப அட்டை அசல் மற்றும் நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் வந்து தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.