குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட  வட்டார வள மைய ஊழியர்கள்.
குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பள்ளி செல்லா குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்ட வட்டார வள மைய ஊழியர்கள்.

குமாரபாளையத்தில் 12 வயது வரையுள்ள - பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம் :

Published on

குமாரபாளையத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக வட்டார கல்வி அலுவலர் வளர்மதி கூறியதாவது:

குமாரபாளையத்தில் 6 வயது முதல் 12 வயது வரையுள்ள மற்றும் மாற்றுத்திறன் கொண்ட பள்ளி செல்லா சிறுவர், சிறுமியரை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

காந்திபுரம், பெராந்தர்காடு, சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கணக்கெடுப்பு பணி நடைபெற்றுள்ளது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியப் பயிற்றுநர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணி தொடந்து நடைபெறும். இதுதொடர்பான அறிக்கை மாவட்ட பள்ளி கல்வித்துறைக்கு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in