

திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(35). இவர் நேற்று முன்தினம் தனது மகள் திரிஷாவுடன்(8) வயலுக்குச் சென்றார்.
அப்போது அங்குள்ள மின் மோட்டாரை திரிஷா தொட்டபோது, எதிர்பாராமல் மின்சாரம் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே திரிஷா உயிரிழந்தார்.
இதுகுறித்து முசிறி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.