

திருச்செந்தூரைச் சேர்ந்த நாராயணன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
திருச்செந்தூர் கோயிலில் 2.9.2009-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷகம் நடைபெற வேண்டும்.
கும்பாபிஷேக தேதியை முடிவு செய்யவும், கோயில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கும்பாபிஷேக தேதியை முடிவு செய்யவும், கோயிலில் மரா மத்துப் பணிகளை மேற்கொள்ள வும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசுவாமி, கே. முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், திருச்செந்தூர் கோயில் கும்பாபி ஷேகத்துக்கு தனிக் குழு அமைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், திருச்செந்தூர் கோயில் கும்பாபி ஷேகம் தொடர்பாக கும்பாபிஷேக குழு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.