Published : 27 Aug 2021 03:13 AM
Last Updated : 27 Aug 2021 03:13 AM

ஆகாய தாமரை, குப்பைகள் அகற்றம் - புதுப்பொலிவு பெற்றுள்ள பேட்டை, உடையார்பட்டி குளங்கள் :

பேட்டை மூளிக்குளம் சுத்தப்படுத்தப்படுவதற்குமுன் ஆகாய தாமரைகள் நிறைந்து காணப்பட்டது. (வலது) சுத்தப்படுத்தியபின் தற்போது புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் தனியாரின் பங்களிப்பால், பேட்டையிலுள்ள மூளிக்குளம், உடையார்பட்டி குளங்கள் புதுப்பொலிவு பெற்று ள்ளன.

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் உள்ள குறிப்பிட்ட சில நீராதாரங்கள் குப்பைகள் கொட்டும் இடமாகவும், கழிவுகள் சேகரமாகும் பகுதியாகவும் மாற்றப்பட்டு வருகிறது. வேய்ந்தான்குளம், நயினார்குளம் போன்ற பெரிய குளங்கள் ஆக்கிரமிப்புகளால் சுருங்கி வருகின்றன. மாநகரிலுள்ள குளங்களை மீட்டெடுக்கவும், பராமரிக்கவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

என்விரான்மென்டலிஸ்ட் பவுண்டேசன் ஆப் இந்தியா (இ.எப்.ஐ) அமைப்பு, மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணுவின் அனுமதி பெற்று, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் மாநகரிலுள்ள குளங்களை மீட்டெடுக்கும் முயற்சி யில் இறங்கியிருக்கிறது. முதற்கட்டமாக திருநெல்வேலி டவுனிலிருந்து பேட்டை செல்லும் சாலையோரத்திலுள்ள மூளிக்குளம் மற்றும் திருநெல்வேலி சந்திப்பிலிருந்து மதுரை செல்லும் சாலையோரமுள்ள உடையார்பட்டி குளம் ஆகியவற்றை சுத்தம் செய்து, ஆகாய தாமரை மற்றும் குப்பைகள், கழிவுகளை அகற்றும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்றது. இப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதை அடுத்து இந்த குளங்கள் புத்துயிர்பெற்று அழகாக காட்சியளிக்கின்றன. இதுபோல், திருநெல்வேலியில் தாமரைகுளம், பேட்டை பெரியகுளம், பீர்கன்குளம், எம்.என். குளம், நொச்சிகுளம் என்று 5 குளங்களை சுத்தம் செய்து புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ள இஎப்ஐ அமைப்பு திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக, அந்த அமைப்பின் நிறுவனர் அருண் கிருஷ்ண மூர்த்தி கூறியதாவது:

``பேட்டை மூளிக்குளம் சாலை யோரத்தில் அமைந்துள்ளதால் அதில் குப்பைகள், கட்டுமான கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. மேலும் கழிவுநீர் தங்குதடையின்றி அதில் சேர்ந்து வந்தது. இதனால் ஆகாய தாமரைகள் குளத்தின் மேற்பரப்பு முழுக்க ஆக்கிரமித்து வளர்ந்திருந்தன. குளத்தை சுத்தப்படுத்தும் பணியின்போது ராட்சத இயந்திரங்கள் மூலம் 68 லோடு ஆகாயதாமரைகள் அகற்றப்பட்டன. சாலையோர குப்பைகள் 9 லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டன. குளத்தின் முன்பக்க கரைகள் சமன்செய்யப்பட்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் உள்வரத்து வெளிவாய்க்கால்கள் அடைப்பின்றி சுத்தம் செய்யப்பட்டது.

உடையார்பட்டிகுளத்தில் குப்பைகள் அதிகளவில் கொட்டப் பட்டிருந்தன. மேலும் அருகிலுள்ள வீடுகளில் இருந்து நேரடியாக கழிவுநீர் வெளியேறி இந்த குளத்தில் சேகரமானது. இங்கும் 44 லாரி லோடு ஆகாயதாமரைகள், 3 லோடு குப்பைகள் அகற்றப்பட்டன. இந்த குளங்களில் எதிர்காலத்தில் ஆக்கிரமிப்புகளை தடுக்க சாலையோரத்தில் வேலி அமைக்கும் பணி மேற் கொள்ளப்படவுள்ளது. மேலும் பருவமழையையொட்டி மரக்கன்று களும் கரைகளில் நடப்படவுள்ளன. தொடர்ந்து மேலும் 5 குளங்கள் சுத்தம் செய்யப்படவுள்ளன” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x