Published : 27 Aug 2021 03:13 AM
Last Updated : 27 Aug 2021 03:13 AM
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்) குண்டாறு- 4 அடவிநயினார்- 3, ஆய்குடி - 4 , செங்கோட்டை- 1. திருநெல்வேலி மாநகர பகுதிகளில் நேற்று முன்தினம் மாலையில் பெய்த மழையால் டவுனில் குற்றாலம் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியுற்றனர்.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்):
கடனா- 66.90 அடி (85 அடி), ராமாநதி- 65 (84), கருப்பாநதி- 61.35 (72), குண்டாறு- 36.10 (36.10), அடவிநயினார்- 119.25 (132.22), பாபநாசம்- 88.45 (143), சேர்வலாறு- 86.45 (156), மணிமுத்தாறு- 65.45 (118), வடக்கு பச்சையாறு- 16.65 (50), நம்பியாறு- 11.15 (22.96), கொடுமுடியாறு- 27.75 (52.25).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT