வேலூர் முத்துமண்டபம் பகுதியில் - 15 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் : ரேஷன் கடை விற்பனையாளர் பதுக்கலா? என விசாரணை

வேலூர் முத்துமண்டபம் பகுதியில் நேற்று ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
வேலூர் முத்துமண்டபம் பகுதியில் நேற்று ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
Updated on
1 min read

வேலூர் முத்துமண்டபம் பகுதி யில் ரேஷன் கடையை நேற்று பொதுமக்கள் முற்றுகையிட்ட னர். இந்த சம்பவம் தொடர்பாக தனியார் ஒருவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 15 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்தனர்.

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் முத்துமண்டபம் பகுதியில் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்தக் கடையில் பெண் விற்பனை யாளர் பணியாற்றி வருகிறார். இவர், அரிசி, பருப்பு, பாமாயில்மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை சரியாக வழங்குவதில்லை என புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில், ரேஷன் கடைக்கு நேற்று பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம் பயோமெட்ரிக் கருவி வேலை செய்யவில்லை என்பதால் அரிசி வழங்கவில்லை என்று பெண் விற்பனையாளர் கூறியதாக தெரிகிறது. ஆனால், அவர் தங்களை அலைக் கழிப்பதாகவும் கடைக்கு வந்த தரமான அரிசி மூட்டைகளை அருகில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறி 30-க்கும் மேற்பட்ட பொது மக்கள் ரேஷன் கடையை முற்றுகை யிட்டனர். மேலும், தரமான அரிசியை வழங்காமல் மோசமாக இருக்கும் அரிசியை மட்டும் அவர் எப்போதும் வழங்குகிறார் என்றும் புகார் கூறினர்.

இந்த தகவலை அடுத்து மாவட்ட வழங்கல் துறை பறக்கும் படை வட்டாட்சியர் கோட்டீஸ் வரன், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் செல்வகுமார் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பொதுமக்கள் புகார் தெரிவித்த வீட்டில் சோதனை நடத்தியதில், 15 மூட்டைகளில் இருந்த 750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளர் அரி (61) என்பவரை உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் கைது செய்தனர்.

இது தொடர்பாக வழங்கல் துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, ‘‘முத்துமண்டபம் பகுதி ரேஷன் கடை பெண் விற்பனை யாளர் மீதான புகார் குறித்து வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் விசாரணை நடத்த உள்ளார்.

மேலும், கடையில் உள்ள பொருட்களின் இருப்பு குறித்தும் அவர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார். அதன் பிறகே அவர் மீது தவறு உள்ளதா? என தெரியவரும்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in