மூத்த குடிமக்கள் பயன்பெற இலவச உதவி எண் வெளியீடு :

மூத்த குடிமக்கள் பயன்பெற இலவச உதவி எண் வெளியீடு :
Updated on
1 min read

தமிழ்நாடு சமூகநல இயக்குநரகம் மற்றும் Amtex Softward Soultions Pvt Ltd (ASSPL) இணைந்து மூத்த குடிமக்களின் தேவைக்காக இலவச தேசிய உதவி எண்: 14567 என்ற எண்ணை அறிமுகம் செய்துள்ளது.

இந்த இலவச உதவி எண் மூலம் மூத்த குடிமக்கள் தங்களது ஓய்வூதியம், அரசின் நலத்திட்ட உதவிகள் தொடர்பான விவரங்கள் கேட்டு பயன்பெறலாம். ஆதரவற்ற மூத்த குடிமக்களின் விவரம் 14567 என்ற இலவச உதவி எண் மூலம் பெறப்பட்டால் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து அவர் களை மீட்டு முதியோர் விடுதிகளில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பராமரிப்புக்கு வழிவகை செய்யப்படும்.

ஆகவே, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் 14567 என்ற இலவச உதவி எண்ணை தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உதவிகளை கேட்டு பெறலாம்’’ என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in