

சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 68,440 டோஸ் தடுப்பூசிகள் நேற்று சேலம் வந்தது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 68,440 டோஸ் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசி நேற்று சேலம் வந்தது.
இதில், சேலம் சுகாதார மாவட்டத்துக்கு 20,000 டோஸ் கோவிஷீல்டு, 2.080 டோஸ் கோவேக்சின், ஆத்தூர் சுகாதார மாவட்டத்துக்கு 10,000 டோஸ் கோவிஷீல்டு, 960 டோஸ் கோவேக்சின், தருமபுரி மாவட்டத்துக்கு 5 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு, 1,440 டோஸ் கோவேக்சின், கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 2,560 டோஸ் கோவேக்சின், நாமக்கல் மாவட்டத்துக்கு 20,000 டோஸ் கோவிஷீல்டு, 1,280 டோஸ் கோவேக்சின் நேற்று அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
138 மையங்களில் தடுப்பூசி
இதையடுத்து, இன்று சேலம் மாவட்டத்தில் 138 தடுப்பூசி மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.