நாகர்கோவிலில் - செப்-15-ல் ராணுவ ஆட்சேர்ப்பு பணி :

நாகர்கோவிலில்  -  செப்-15-ல் ராணுவ ஆட்சேர்ப்பு பணி  :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ராணுவ ஆட் சேர்ப்பு திரளணி, நாகர்கோவில் அறிஞர் அண்ணா மைதானத்தில் வரும் 15.9.2021 முதல் 30.9.2021 வரை நடைபெறவுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சேர்க்கை அட்டை யுடன் கலந்து கொள் ளலாம்.

சிப்பாய் (பொதுப்பணி) பிரிவுக்கு 10-ம் வகுப்பு தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் 33 சதவீதம் மதிப்பெண் களும், மொத்த மதிப்பெண் சராசரி 45 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிப்பாய் டெக்னிக்கல் பிரிவுக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி. இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் மொத்த மதிப்பெண் சராசரி 50 சதவீதம் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 40 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

சிப்பாய் நர்சிங் அசிஸ்டெண்ட் பிரிவுக்கு கல்வித் தகுதி 12-ம் வகுப்பு தேர்ச்சி. சிப்பாய் கிளார்க், ஸ்டோர் கீப்பர் பிரிவுக்கு 12-ம் வகுப்பு இன்டர்மீடியேட் தேர்ச்சி, (கலை, கணிதவியல், அறிவியல்). இவை அனைத்து பணிகளுக்கும், 165 செ.மீ உயரம், மார்பளவு 77 செ.மீ., 5 செ.மீ. விரிவடைய வேண்டும். வயது பதினேழரை முதல் 23 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு பாளையங் கோட்டை முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in