குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பம் :

குடிநீர் இணைப்பு பெற விண்ணப்பம்  :
Updated on
1 min read

தென்காசி மாவட்டத்தில் திருவேங்கடம் தவிர மற்ற அனைத்து பேரூராட்சிகளிலும் வீட்டு குடிநீர் இணைப்புகள் பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பப் படிவத்தை tenkasi.nic.in/forms/ என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பேரூராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.

புதிதாக வீட்டு குடிநீர் இணைப்பு பெற விரும்பும் நபர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் விண்ணப்ப பதிவுக் கட்டணம், பேரூராட்சி மூலம் நிர்ணயம் செய்யப்பட்ட வைப்புத்தொகை மற்றும் சென்டேஜ் கட்டணத்தை வங்கி வரைவோலை மூலம் செலுத்தி வீட்டு குடிநீர் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in